சமயபுரம் உண்டியலில்.. ரூ 91 லட்சத்து 95 ஆயிரம் ரொக்கம், 2. 477 கிலோ தங்கம்..

109
Spread the love

மாதம் இரண்டு முறை சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்கள் எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று 12 உண்டியல்கள் எண்ணப்பட்டன. கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் நேற்று மொத்தம் 12 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. திருக்கோயில் பணியாளர்கள் கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் உண்டியல் பணத்தை எண்ணி தங்கம் வெள்ளி நகைகள் அயல்நாட்டு கரன்சிகள் எண்ணப்பட்டன. இறுதியில் உண்டியலில் ரொக்கமாக 91 லட்சத்து 95 ஆயிரத்து 048 ரூபாய் பணம், 2 கிலோ 477 கிராம் தங்க நகைகள்,  2 கிலோ 880கிராம் வெள்ளி நகைகள்.  வெளிநாட்டு கரன்சிகள் 31 இருந்தன. 

LEAVE A REPLY