திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற் க்கு 30 ம் நாள் நிகழ்வை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் அனைத்து கட்சியினர் இதய அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலம் நடைபெற்று அவரது திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது
மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் திரையுலகினர் பொதுமக்கள் தொண்டர்கள் நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இலையில் சமயபுரத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு 30 ம் நாள் நிகழ்வாக திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கே. எஸ். குமார் தலைமையில் அனைத்து கட்சியினர் இதய அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று ச. கண்ணனூர் பேரூராட்சியில் இருந்து சமயபுரம் நால்ரோடு வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சமயபுரம் நால்ரோடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருஉருவ படத்திற்கு அனைத்து கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த அமைதி ஊர்வலத்தில் காங்கிரஸ் ,நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் ஒன்றிய,சமயபுரம் நகர தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.