Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி துறையூர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடல்

திருச்சி மாவட்டம், துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சார்பு நீதிபதி விஜய் கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்பு முன்னிலை வகித்தார். துறையூர் சட்டப்பணி குழுவின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகள் நட்டப்பட்டன. இந்நிகழ்ச்சியில் துறையூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முத்துக்குமார், செயலாளர் செல்லதுரை, பொருளாளர் சசிகுமார் ஏ எஸ் மனோகரன் செந்தில்குமார் பொடலத்தி சிவகுமார், பொன் மலர் முகிலன், விவேக் ராஜா, அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினர்.

error: Content is protected !!