Skip to content
Home » தமிழகத்திற்கு மேலும் 3 தேர்தல் அதிகாரிகள் நியமனம்…. சத்யபிரதா சாகுவுக்கு நெருக்கடியா?

தமிழகத்திற்கு மேலும் 3 தேர்தல் அதிகாரிகள் நியமனம்…. சத்யபிரதா சாகுவுக்கு நெருக்கடியா?

  • by Senthil

மக்களவை  தேர்தல் தேதி  விரைவில்  வெளியாக இருக்கிறது.  தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர்  சத்யபிரதா சாகு. இவர்  கடந்த 2018 முதல்  இந்த பதவியில் இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலையும் . 2021 சட்டமன்ற தேர்தலையும் இவர் தான் நடத்தினார். இப்போது 2024ம் ஆண்டு  தமிழகத்தில்  பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பே இல்லை என்ற நிலையில்,   மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில்  இப்போது தமிழகத்திற்கு மேலும் 3 தேர்தல் அதிகாரிகளை  கூடுதலாக இந்திய  தலைமை தேர்தல் ஆணையர்  நியமித்து உள்ளார்.  சங்கர்லால் குமாவத் இவர் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பார்.  இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.  ஸ்ரீகாந்த்,  அரவிந்தன் ஆகியோர் இணை  தலைமை தேர்தல் அதிகாரிகளாக இருப்பார்கள்.

3 பேரும் ஐஏஎஸ் அதிகாரிகள் தான். இவர்களில் ஏற்கனவே உள்ள  சத்யபிரதா சாகு தான்   கூடுதல் அதிகாரம் பெற்றவர். இவருக்கு அடுத்தபடியாக இவர்கள் 3 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள்  அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்வது,  நிதி  செலவினங்கள் போன்றவற்றை   கவனிப்பார்கள்.

சில தொகுதிகளில்  தேர்தலை நிறுத்துவது , வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்தல் போன்ற பணிகளை செய்யத்தான்  தேர்தல் ஆணையம்  இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என  அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.  வழக்கமாக தேர்தல் அறிவிப்பு வெளியான சில நாட்களில் தேர்தல் பார்வையாளர்களாகத்தான்  இப்படி ஐஏஎஸ் அதிகாரிகள் வருவார்கள். அவர்கள் ஏதாவது குற்றம், குறைகள் இருந்தால் அவற்றை  சத்யபிரதா சாகு கவனத்திற்கு கொண்டு வருவார்கள். அவர் தான்  இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்வார்.  ஆனால் இப்போது அதற்கு நேர் மாறான நடவடிக்கையாக  இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக  பரவலாக கூறப்படுகிறது.

கூடுதலாக 3 பேர்  தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதால் சத்யபிரதா சாகுவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த நியமனம் இருக்கலாம். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற நியமனம் இருக்கும். இவர்கள்  மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பிக்களை அதிரடியாக மாற்றி   மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவான அதிகாரிகளை நியமனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  எதிர்க்கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!