Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிங்காரவேலர் கும்பாபிசேகம்……நாகை தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ் கடவுளான முருக பெருமானின் கோவில்களில் மிக முக்கியமானது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடக்கிறது. குடமுழுக்கன்று சிவன், முருகன், பெருமாள் ஆகியோருக்கு ஒரே மேடையில் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் செயல் அலுவலர் முருகன் உள்பட இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகை தாலுகா சிக்கலில் உள்ள சிங்காரவேலர் கோவில் குடமுழுக்கு வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) அன்று நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே நாகை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (5-ந்தேதி) விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு வேலை நாளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!