கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் நேற்று இரவு நடைபெற்ற ஊர் கூட்டத்தில் கோவில் கும்பாபிஷேக செலவுபோக மிஞ்சிய பணத்தை கேட்டு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒருவர் உயிரிழப்பு .
நால்வரிடம் திருவிடைமருதூர் காவல் துறையினர் விசாரணை .
திருவிடைமருதூர் வட்டம் வேப்பத்தூர் அருகே காமராஜர் புரத்தில் கருமாரியம்மன் ஆலயம் உள்ளது .
இந்த ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது .
கும்பாபிஷேகத்திற்காக வீட்டுக்கு வீடு வரி விதிக்கப்பட்டதுடன் இந்து சமய அறநிலைத்துறை கோவில் கும்பாபிஷேகத்திற்காக ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளது.
இந்த பணத்தை நாட்டாமை கணேசன் தனது பொறுப்பில் வைத்துக் கொண்டு கும்பாபிஷேக செலவுகளை செய்துள்ளார் .
செலவு போக மீதம் 34 ஆயிரம் ரூபாய் இவரிடம் இருந்ததாகவும் கூறப்படுகிறது .
கடந்த மாதம் இந்த ஆலயத்தில் ஊர் கூட்டம் நடைபெற்றது. அப்போது இவரிடம் செலவு போக மீதம் உள்ள 34,000 ரூபாய் பணத்தை உடனடியாக தாருங்கள் என கோவில் ஊர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது அதற்கு ராஜன் விரைவில் தருவதாக தெரிவித்துள்ளார் .
இந்நிலையில் நேற்று இரவு ஊர் கூட்டம் நடைபெற்றுள்ளது .
இதில் நாட்டாமை ராஜன் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது கும்பாபிஷேக செலவு போக மீதம் உள்ள பணத்தை கேட்டுள்ளனர் .
அப்போது ராஜனுக்கும் ஊர் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது .
அப்போது ராஜன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக ராஜனின் உறவினர்கள் ராஜனை தூக்கிக்கொண்டு திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
அங்கு ராஜனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் .
இதனை தொடர்ந்து இவரது உடல் உடற்கூராய்வுக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது .
இதனைத் தொடர்ந்து ராஜனின் உறவினர்கள் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் .
இந்த புகாரிணைத் தொடர்ந்து நேற்று இரவு கோவிலில் ராஜனுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட சங்கர், பாபு, வினோத், கணேசன் ஆகிய நால்வரை காவல்துறையினர் விசாரணைக்காக திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் .
அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது .
ராஜனுக்கு ஏற்கனவே மாரடைப்பு வந்துள்ள நிலையில், தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது தள்ளி விட்டதில் இறந்தாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் .
இந்த சம்பவம் வேப்பத்தூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது
