நடிகருக்கும் தலைவருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தவெகவினர் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருந்த நிலையில், சீமானும் சினிமா துறையில் இருந்து வந்தவர்தான் என அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் திரையிலிருந்து வந்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டிய அவர், பட்ஜெட் நகலை வழிபாட்டு தலங்களில் வழிபடுவது என்பது தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றும் தெளிவுபடுத்தினார். மேலும், இதுபோல கலைஞர் நினைவிடத்திலும் வழிபட்டதாக கூறியுள்ளார்.
