Skip to content
Home » சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்… மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்… மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

  • by Senthil

சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று  முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலை திறப்பு விழா இன்று நடந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின்,  வி.பி. சிங் சிலையை திறந்து வைத்தார்.  இந்த விழாவில் வி. பி. சிங் மனைவி சீத்தாகுமாரி, மகன் அபய்சிங்,  உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும்  தமிழக அமைச்சர்கள்,  எம்.பி. எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து  கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வி.பி. சிங் அவர்களின்  சிலையை திறந்து வைக்கும் மகத்தான் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மனநிறைவு கொள்கிறேன்.  150 ஆண்டுகால  பழமை வாய்ந்த இந்த கல்லூரி வளாகத்தில்,   கலைஞர் நினைவிடம்  அமைந்துள்ள சாலையில் இந்த சிலை வைக்கப்பட்டு உள்ளது.

வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது மண்டல் கமிஷன்  பாிந்துரையை அமல்படுத்தினார். இதை ஆதிக்க சக்தரிகள் எதிர்த்து வன்முறை போராட்டம் நடத்தியபோது, தலைவர் கலைஞர் இதே கலைவாணர் அரங்கில் ஒரு கவியரங்கம் நடத்தினார்.  கோபத்தோடு அவர் கவிதை பரிகள் படித்தார்.  அவருடைய கவிதை வரிகள் சமூக நீதிக்கான குரலாக தெறித்தது.

முற்பட்டோருக்கு  தங்கத்தால் மூளை செய்து மண்டைக்குள் வைத்தானா,  மற்றவர் மண்டைக்குள்  வைத்தது களிமண்ணா,  சுண்ணாம்பா என கேட்டார்.  அவரது கொந்தளிப்பை இன்றும் என்னால் உணர முடிகிறது.  வி.பி. சிங்குக்கு  உ.பி. தாய்வீடு என்றால் தமிழ்நாடு தான் அவருக்கு தந்தை வீடு.  எந்த விழாவில் அவர் பேசினாலும், பெரியார் பெயரை  உச்சரிக்காமல் பேசமாட்டார்.

நான் 2 முறை வி.பி. சிங் அவர்களை சந்தித்து  இருக்கிறேன்.  1988ல்  தேசிய முன்னணி தொடக்க விழா சென்னையில் நடந்தபோது மாபெரும் ஊர்வலம் நடந்தது.  காயிதே மில்லத் கல்லூரி அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்ந்து வி.பி. சிங் அந்த ஊர்வலத்தை பார்வையிட்டார். நான் தலைமையேற்று இளைஞர் அணி ஊர்வலத்தை நடத்தி வந்தேன்.  அந்த ஊர்வலத்தை வி.பி. சிங் பார்வையிட்டார். அப்போது நான் அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கல.

அடுத்ததாக அவர் பிரதமர் ஆன போது அவரை சந்திக்கச் சென்ற எம்.எல்.ஏக்கள் குழுவில் நானும் சென்றிருந்தேன். அப்போது என்னை அறிமுகப்படுத்தியபோது, இவரை எனக்கு தெரியும். சென்னையில் இளைஞர் படை ஊர்வலத்தை நடத்தியவர். இவரை எப்படி மறக்க முடியும்?  என்றார்.  இன்று நான் அவருக்கு  சிலை திறந்து வைத்திருக்கிறேன். இதை விட பெருமை எனக்கு என்ன வேண்டும்.  இந்த விழாவில் கலந்து கொண்ட வி.பி. சிங் அவருடைய  மனைவி சீத்தாகுமாரி,  மகன் அபய்சிங் ஆகியோருக்கம் நன்றி.

நீங்கள் மட்டும் வி.பி. சிங் குடும்பம் அல்ல. நீங்கள் விபி சிங் குடும்பம் என்றால் நாங்கள் யார்?  பிரதமர் பதவியே போனாலும் பரவாயில்லை.  மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியே தீருவேன் என்று அமல்படுத்தினார்.  அந்த கொள்கையில் இம்மி அளவு பிசகாமல்  திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.

விபி. சிங்  ஜமீன்தார் குடும்பத்தில், பிறந்தாலும்  பூமிதான இயக்கத்தில் சேர்ந்து  பூமிதான இயக்கத்துக்கு தங்கள் நிலங்களை வழங்கியவது.  அவர் பிரதமராக பதவி வகித்தது 11 மாதங்கள் தான். ஆனால் அந்த காலத்தில் மகத்தான  சாதனைகளை செய்தார். பிற்பட்ட மக்களுக்கு  27 % இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.  ஆனால் அவர் பிற்படுத்தப்பட்டவர் அல்ல, ஏழை அல்ல.  ஆனாலும் அவர் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தார்.  அவருடைய சாதனைகள்  பெரிய பட்டியலே இருக்கிறது. காவேரி நடுவர் மன்றம் அமைத்தவர் வி.பி. சிங்.

இந்தியாவில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில்  வெறும் 4% பேராசிரியர்கள் தான்  பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சோந்தவர்கள்.  கடந்த 2018 முதல் 23 வரை உயர்நீதிமன்றங்களில்  நியமிக்கப்பட்ட 604  நீதிபதிகள் 74 பேர் தான் பிற்படுத்தப்பட்டவர்கள். ஒன்றிய அரசின் செயலாளர்கள் 93 பேரில் 88 பேர்  உயர்சாதியினர்.

சமூக நீதி பயணத்தில் திமுக ஒருபோதும் சோர்ந்து போகாது.  விபி சிங் பிரதமராக இருந்தபோது,  முதல்வர் கலைஞரிடம் சொன்னார், நீங்கள் எந்த கோரிக்கைக்காகவும் சென்னை டில்லி வரவேண்டாம். எதுவாக இருந்தாலும்  போனிலேயே சொல்லுங்கள். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்றார். அது காலம்  இனியும்  வரவேண்டும்.

அவருக்கு சிலை திறப்பதன் மூலம் தமிழ்நாடு பெருமை அடைகிறது. சமூக நீதியை அடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது.  மத்திய அரசு உடனடியாக மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தணும். மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக, முறையாக வழங்கப்படபட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டை முறையாக கண்காணிக்க அனைத்துக் கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிகள் வேறுபடலாம்; ஆனால் பிரச்சனைகள் ஒன்றுதான்.புறக்கணிப்பு, ஒதுக்குதல், அடிமைத்தனம், தீண்டாமையை முறிக்கும் மருந்துதான் சமூகநீதி.

விபி. சிங் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் மறையாது.  விபி சிங்கை  யார் மறந்தாலும், தமிழகம் மறக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!