வெவ்வேறு விபத்து சம்பவங்கள் – திருச்சி வழக்கறிஞர்
உட்பட 5 பேர் பலி
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் இவரது மனைவி சிவப்பாயி (வயது 77) இவர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழுவூர் பஸ் நிறுத்த பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற ஈச்சர் லாரி எதிர்பாராத விதமாக மூதாட்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் மூதாட்டி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் சசிகலா கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் லாரி டிரைவர், கோவை
வேலப்ப நாயக்கன்பாளையம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை வையம்பட்டி கள்ளிக்காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் ( 45 )இவர் தனது மோட்டார் சைக்கிளில் மணப்பாறை ஆண்டவர் கோவில் கட் ரோடு பகுதியில் சென்ற போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே வீரப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர் பின்னர் இது குறித்து அவரது மனைவி கோகிலா கொடுத்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி புழுதிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவரது மகன் நவீன் ராஜ் வயது 28 இவர் தனது மோட்டார் சைக்கிளில்
துவரங்குறிச்சி முத்துப்பட்டி பழைய தீயணைப்பு நிலைய அலுவலகம் அருகே சென்றபோது, அந்த வழியாகச் சென்ற கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த நவீன் ராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து அவரது தந்தை ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மூதாட்டி பலி
திருச்சி கருமண்டபம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள்இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 65) இவர் திருச்சி திண்டுக்கல் சாலையில் தனியார் வங்கி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது ரோட்டை கிடக்கும் என்றபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது.இதில் தலையில் பணத்த காயம் அடைந்த வள்ளியம்மாலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்இதுகுறித்து அவரது மகன் ஆறுமுகம் அளித்தார் திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வக்கீல் பலி
திருச்சி மேல சிந்தாமணி நங்கவரம் காவேரி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் வயது 72 பிரபல வழக்கறிஞர் இவர் நேற்று மாலை நீதிமன்றத்தில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது கரூர் பைபாஸ் சாலையில் அறிவாலயம் அருகே சென்று கொண்டிருந்தபோது தனியார் பஸ் இவர் மீது மோதியது.உடனே அவரை மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலவீனின்றி பரிதாபமாக இறந்தார் இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து பலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு என்று விசாரணை செய்து வருகின்றனர்.
