கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி போலீசார், பாலியல் வன்கொடுமை வழக்கில் தள்ளிவீட்டில் பகுதியை சேர்ந்த ஆஷிக் (24) என்பவரை வலைவீசி தேடிவந்தனர். மேலும் அவருக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த நிலையில் ஆஷிக், மலப்புரம் மாவட்டம் திரூரில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாரிப்பிள்ளி போலீசார் அங்கு சென்று திரூர் போலீசார் உதவியுடன் அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர் தப்பிக்க போலீசாரை தாக்கினார். தொடர்ந்து போலீஸ்காரர் சஜீரின் கையை கடித்தார். ஆனாலும் போலீசார் அவரை கைது செய்து திரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மேலும் காயமடைந்த சஜீர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அத்துடன் போலீசாரை தாக்கி காயப்படுத்தியதற்காக ஆஷிக் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
