Skip to content
Home » பாராளுமன்றத்திலும் பாலியல் தொல்லை….. ஆஸி.,பெண் எம்.பி. குமுறல்…

பாராளுமன்றத்திலும் பாலியல் தொல்லை….. ஆஸி.,பெண் எம்.பி. குமுறல்…

  • by Senthil

ஆஸ்திரேலியாவின் பெண் எம்.பி.யான லிடியா தோர்ப், ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விவரிக்கும் பொழுது தெரிவித்துள்ளார். சுயேச்சை உறுப்பினரான லிடியா தோர்ப், கண்ணீருடன் செனட் சபையில் ஆற்றிய உரையில் கூறியதாவது:

பலம் வாய்ந்த ஆண்களால் தாம், பாலியல் ரீதியான விமர்சனங்களுக்கு ஆளானதாகவும், மாடிப்படிகளில் நகர விடப்படாமல் பாலியல் தாக்குதலுக்குள்ளானதாகவும், அத்துமீறிய தொடலுக்கு ஆளானதாகவும், தமக்கு பாலியலுறவுக்கான அழைப்புகள் வந்ததாகவும் கூறியுள்ளார்.  முன்னதாக தன்னுடன் பணியாற்றும் செனட் உறுப்பினர் ஒருவர் மீது பாலியல் தாக்குதலுக்கான குற்றச்சாட்டை வைத்த தோர்ப், பின்னர் பாராளுமன்ற தடை வருவதற்கான ஆபத்து வந்ததும் அவற்றை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

தற்போது, தோர்ப் லிபரல் கட்சியைச் சேர்ந்த டேவிட் வான் என்பவர் மீது தாம் முன்பு தெரிவித்த குற்றச்சாட்டுகளை மீண்டும் தொடுத்துள்ளார். வான் வழக்கறிஞர்களை அமர்த்தியுள்ளதாக தெரிவித்த தோர்ப், பாராளுமன்ற விதிகளின்படி தமக்கு நேர்ந்ததை மீண்டும் கூற வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை உண்மையில்லை என மறுத்த வான், இதனால் தாம் மனதளவில் நொறுங்கி விட்டதாக தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கட்சியும் வான்-ஐ இடைநீக்கம் செய்து விட்டது. இந்த நிலையில் ஸ்கை நியூஸ் தொகுப்பாளரும் முன்னாள் லிபரல் கட்சியின் எம்.பி.யுமான அமண்டா ஸ்டோக்கர், டேவிட் வான் தன்னை ஒரு பாராளுமன்ற நிகழ்ச்சில் தனது அந்தரங்க உறுப்பை அழுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருந்ததாகவும் ஆனால், லிடியா தோர்ப்பின் புகாரை அடுத்து, இனி அவ்வாறு இருக்க முடியாது என்றும் அவர் கூறி உள்ளார். நவம்பர் 2020 ல், பாராளுமன்ற அலுவலகத்தில் முறைசாரா சமூகக் கூட்டத்தில் செனட்டர் வான் என்னை தகாத முறையில் தொட்டார். நான் இந்த செயலை வன்மையாக கண்டித்தேன் .அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அதை மீண்டும் செய்யக்கூடாது என்றும் அவரிடம் கூறினேன். அவர் மன்னிப்பு கேட்டார், மேலும் அதை மீண்டும் செய்ய மாட்டேன் என்று கூறினார். அவரது மன்னிப்பு மற்றும் அவரது உறுதிமொழியை நான் ஏற்றுக்கொண்டேன். அவரது நடத்தை மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய நான் விரும்பினேன் என கூறி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!