Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலை… சக்தி மாரியம்மன் கோயில் பால்குட ஊர்லம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தெற்கு மயிலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் 20 ஆம் ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு  இன்று விரதம் மேற்கொண்ட 200க்கு மேற்பட்ட பக்தர்கள் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் நீராடி பால்குடம், தீர்த்த குடம் எடுத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து தெற்கு மயிலாடி முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து  ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அவர்களது நேர்த்திக்கடனையும் செலுத்தினர் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!