Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை கடும் உயர்வு- கோரிக்கை

சென்னை: கோயம்பேட்டில் சின்ன வெங்காயத்தின் விலையைத் தொடர்ந்து காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ. 220-க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.65-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே போல வரத்து குறைவால் பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.120-க்கும், பீட்ரூட் மற்றும் அவரைக்காய் ஒரு கிலோ ரூ.60-க்கும் தற்போது விற்பனையாகிறது. சமீபத்திய விலை உயர்வால் சின்ன வெங்காயம் வாங்குவதையே தவிர்ப்பதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

மேலும் வெங்காயம், பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயத்தின் தினசரி வரத்து வழக்கமான சுமார் 160 டன்னிலிருந்து 60 டன்னாகக் குறைந்துள்ளதே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!
Secret Link