Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் ரூ.92.53 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்-பாராட்டு

சிங்கப்பூரிலிருந்து கடந்த 9 ஆம் தேதி திருச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், குறிப்பிட்ட விமானத்தில் சோதனை நடத்தினர். அப்போது விமான கழிவறையில் கருப்பு நாடாவால் சுற்றப்பட்ட 6 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 600 கிராம் எடை கொண்ட இந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.92,53828 ஆகும். தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், தங்கம் கடத்தி வந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் கடத்தல் தங்கத்தை கண்டுபிடிப்பதற்கு உதவிய விமான நிலைய ஊழியர் வெற்றிவேல் என்பவரை, திருச்சி சுங்கத்துறை ஆணையர் பரத் பிரகாஷ் கூடுதல் ஆணையர் விஜய் கிருஷ்ணவேலன் மற்றும் விமான நிலைய புலனாய்வு பிரிவு துணை ஆணையர் பிரகாஷ் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டி, அவருக்கு ரொக்க பரிசு வழங்கி கௌரவித்தனர்.

error: Content is protected !!