Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கார்-டூவீலரில் கடத்தல் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கார்-டூவீலரில் கடத்தல் புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சி இபி ரோடு சினிமா தியேட்டர் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சிலர் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தபோது பெரம்பலூர் மாவட்டம், விகளத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஸ் (வயது 29), புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மலைகுடிபட்டியை சேர்ந்த சிவானந்தம் (வயது 28 )என்பது தெரிய வந்தது.

மேலும் இவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து 313கிபுகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளன மேலும் அவர்களிடமிருந்து செல்போன், பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!