Skip to content
Home » சொத்து குவிப்பு வழக்கில் திருச்சி அதிகாரி தம்பதிக்கு 5 ஆண்டு சிறை…. 100 கோடி பறிமுதல் செய்ய உத்தரவு..

சொத்து குவிப்பு வழக்கில் திருச்சி அதிகாரி தம்பதிக்கு 5 ஆண்டு சிறை…. 100 கோடி பறிமுதல் செய்ய உத்தரவு..

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்கார் பேட்டை, பில்லாதுரை கிராமத்தைச்
சேர்ந்தவர் வேணுகோபால் மகன் ஜானகிராமன் (.79). இவர் சார்பதிவாளராக பணிபுரிந்தவர். இவர் சார்பதிவாளராக பணிபுரிந்த 1989-1993 காலத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக பொறுப்பு வகித்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் மேற்கண்ட
இடங்களில் இவர் பணிபுரிந்த போது, அவரது வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில் இவரது பெயரிலும், இவரது மனைவி திருமதி.வசந்தி (வயது65) பெயரிலும் வாங்கிக்குவித்த சொத்துக்களின் அப்போதைய மதிப்பு ரூ.32,25,532/= (ரூபாய் முப்பத்தி இரண்டு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐநூற்றி முப்பத்தி இரண்டு மட்டும்) 98% ஆகும். இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததன்பேரில், கடந்த
17.08.2001 அன்று அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவில் காவல் ஆய்வாளர் திரு.அம்பிகாபதி அவர்களால் வழக்கு தொடுக்கப்பட்டு புலன் விசாரணை முடித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணையில் இருந்து வந்த வழக்கின் தொடர்விசாரணையை தற்போதைய காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், சிறப்பு அரசு வழக்குறைஞர் சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் சேவியர்ராணி மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர்களால் நடத்தப்பட்டு
வந்தது. இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!