Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

தஞ்சை காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

ஆடி மாதம் கடைசி வெள்ளி மற்றும் ஆடிப்பூரம் முன்னிட்டு தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள புகழ்பெற்ற வடப்பத்ர காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன

அம்மன் வேடத்தில் வந்த பெண் பக்தை காளியை வழிபட்டு காவேரி மண்ணில் நெல் விளையும் விவசாயி கஷ்டம் எல்லாம் கரையும் மண் செழிக்க மழை தருவேன் மக்களோடு மனம் குளிர வளம் தருவேன் என குறி சொல்லி கோவிலுக்கு வந்த பெண் பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு குங்குமம் வளையல் கொடுத்தார்

தஞ்சை கீழவாசல் பகுதியில் புகழ்பெற்ற சக்தி வாய்ந்த வடபத்திர காளியம்மன் கோவில்

உள்ளது. மராட்டிய மன்னர் காலத்தில் எழுப்பப்பட்ட இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்

ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூரம் ஆகியவற்றை ஒட்டி கோவிலில்

ஏராளமான பெண் பக்தர்கள் குவிந்தனர். அம்மனுக்கு மஞ்சள் குங்குமம் திரவியம் பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பல வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டுப் புடவை சாத்தி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது

அம்மன் வேடத்தில் கோவிலுக்கு வந்த பென பக்தை ஒருவர் மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டும் என அம்மனிடம் வேண்டிக் கொண்டவர்

காவேரி மண்ணில் நெல் விளையும் விவசாயிகள் கஷ்டம் தீரும் மண் செழிக்க மழை தருவேன் மக்களோடு மனம் குளிர வரம் தருவேன் என குறி சொல்லி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு குங்குமம் வளையல் வழங்கினார்.

error: Content is protected !!