Skip to content
Home » இந்திய தேர்தல்….. கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்ஸ்

இந்திய தேர்தல்….. கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்ஸ்

  • by Senthil

உலகின் மிகப்பெரிய  ஜனநாயக நாடான இந்தியாவில்  18வது மக்களவைக்கான தேர்தல் இன்று தொடங்கியது.  7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்கிறது. இன்று  முதல்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட மொத்தம் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.  இந்தியாவின் ஜனநாயகத்தை போற்றும் வகையில்  கூகுள் நிறுவனம் தனது டூடுல்சில் இன்று சிறப்பு செய்துள்ளது.  கூகுள் என்ற ஆங்கில வாா்த்தையின் இரண்டாவது ஓ வை  ஒரு கைவிரல் போல தீட்டி அதில்  வாக்களித்தபின் வைக்கப்படும் அடையாள மை இடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!