ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக தென்காசிக்கு பகல் நேர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை.30 முதல் ஆக.15 வரை இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், காலை 5 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு மாலை 3:30 மணிக்கு தென்காசி சென்றடையும். 14 சேர் கார் பெட்டிகள், 2 படுக்கை வசதி பெட்டிகள் என 23 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
