Skip to content
Home » ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ….கவர்னர் ஆர். என். ரவி உழவாரப்பணி….. படங்கள்..

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ….கவர்னர் ஆர். என். ரவி உழவாரப்பணி….. படங்கள்..

  • by Senthil

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால்  போற்றப்படுவதுமான  ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு தமிழ்நாடு  கவர்னர்  ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று   வந்தார்.   கோவிலில்   அவருக்கு அர்ச்சகர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர்  ரவி, ரங்கநாதர் சந்நிதி,தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் தாயார் சன்னிதி அருகே உள்ள ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது

மனைவியுடன் ஊழவாரப்பணி செய்தார். வாளியில் தண்ணீர் எடுத்து சென்று படிக்கட்டுகளில் ஊற்றி  படிக்கட்டுகளை  கழுவி சுத்தம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கவர்னர் ரவி கூறியதாவது:

ஒரு கிராமம் உருவாவதற்கு முன்பாக அங்கு கோவில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்தியே அந்த கிராமங்களின் வளர்ச்சி இருக்கும். அந்த வகையில் ஒரு ஈர்ப்பு விசையாக கோவில்கள் உள்ளது.நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது. காலனியாதிக்க காலத்தில் அது மழுங்கடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ராம பிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார்.

கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோயில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
கோயில் மட்டுமல்ல பொது இடங்களிலும், தனியார் இடங்களில் தூய்மை பேண வேண்டும் .

இவ்வாறு அவர் கூறினார்.

ஶ்ரீரங்கம் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கவர்னர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள  தேரெழுந்தூர் புறப்பட்டு செல்கிறார். அங்கு  நடைபெறும் அயோத்தி ராமரும், தமிழ் கம்பரும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகிறார்.

திருவள்ளுவரை காவி உடையுடன் சித்தரித்த கவர்னரை கண்டித்து இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் அவருக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட், மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் கருப்புக்கொடி  காட்டப்படும் என  தொிகிறது. இதனால் ஆங்காங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!