Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா…….. முகூர்த்தக்கால் நடப்பட்டது

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான  ஸ்ரீரங்கம்  அரங்கநாத சுவாமி திருக்கோவிலில்  நாள்தோறும் விழாக்கள் நடந்து வந்தாலும் இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. லட்சகணக்கான மக்கள்  இந்த விழாவில் பங்கேற்பார்கள்.  வரும் டிசம்பர் மாதம்  23 ம் தேதி இந்த விழா நடக்கிறது.

இந்த விழாவுக்கான முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று தொடங்கியது.கோவில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

டிசம்பர் 12ம் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது, 13தேதி பகல்பத்து விழா தொடங்குகிறது, அதனைத் தொடர்ந்து பகல் 10 விழாவின் பத்தாம் திருநாளான மோகினி அலங்காரம் 22 ம் தேதியும் ராபத்து திருவிழாவின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு டிச-23ம் தேதி அதிகாலை 4மணிக்கு நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 2024 ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி காலை நம்மாழ்வார் மோட்சத்துடன்  நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை   அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!