Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மீண்டும் ஸ்ரீரங்கம் வருவேன்…. பிரதமர் மோடி தகவல்

பிரதமர் மோடி ஸ்ரீரங்கம்  கோயிலில் இன்று காலை  சுமார் 1 மணி நேரம் 40 நிமிடம் சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்குள் பிரதமர்  வரும்போது அவரை  சுந்தர் பட்டர் பூரண கும்ப மரியாதை செய்து வரவேற்றார்.   தரிசனங்களை நிறைவு செய்து ராமேஸ்வரம் புறப்படும்போது சுந்தர் பட்டரை சந்தித்த பிரதமர்  கோயிலில் தரிசனம் செய்தது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் இங்கு வருவேன் என்றும் பிரதமர் கூறியதாக சுந்தர் பட்டார் கூறினார்.

இது குறித்து சுந்தர் பட்டர் கூறியதாவது:

பிரதமர்  கோவிலுக்குள் வந்ததும் முதலில் ஆஞ்சநேயர் சந்நிதி சென்று வழிபட்டார். சக்தி கொடுப்பவர் ஆஞ்சநேயர் என்பதால் முதலில் ஆஞ்சநேயர் சந்நதி சென்றார். பின்னர்  பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார்,  கருடாழ்வார் சந்நிதிகளுக்கு சென்று வழிபட்டார்.    ரெங்கநாதர் ஆலயத்தில் அவர் வழிபட்டதால் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.  இங்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. சந்தர்ப்பம் கிடைத்தால்  மீண்டும் வர முயற்சிப்பேன் என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!