Skip to content
Home » ஸ்ரீரங்கம் கோயிலில் சஹஸ்ரதீபம் …. படங்கள்…

ஸ்ரீரங்கம் கோயிலில் சஹஸ்ரதீபம் …. படங்கள்…

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இங்கு தேரோட்டமும் திருவிழாவும் நடைபெற்றாலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது. அதே போல கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

Srirangam Sri Namperumal Kaisika Ekadasi Aasthanam

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ப்ரமோதினி என வழங்கப்படுகிறது. இது கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரதமுறையைப் பின் பற்றுவதால் உயர்ந்த நன்மைகள் கிடைக்கும். பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும்.  ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதசுவாமி திருக்கோயில் தாயார் சந்நிதியில் நேற்று மாலை சஹஸ்ரதீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீப திருநாள் வருகிற நவம்பர் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் பொதுமக்கள் தங்களது வீடு, கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். இதற்காக மண்ணால் செய்யப்படும் அகல் விளக்கு தயாரிக்கும் பணி பல்வேறு இடங்களில் மும்முரமாக நடைபெற்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!