Skip to content
Home » எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட்….91.39% தேர்ச்சி…. வழக்கம்போல மாணவிகள் சாதனை

எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட்….91.39% தேர்ச்சி…. வழக்கம்போல மாணவிகள் சாதனை

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம்  நடந்து முடிந்தது.  எஸ்.எஸ்.எல்.சி.,   ரிசல்ட் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.  மொத்தம் 9 லட்சத்து 14ஆயிரத்து 320 பேர்  இந்த தேர்வு எழுதினர். இதில்  8 லட்சத்து 35ஆயிரத்து 614 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.  தேர்ச்சி சதவிகிதம் 91.39% . மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி அதிகம்  ஆகும்.  கடந்த ஆண்டு 90.07% பேர் தான் தேர்ச்சி பெற்று இருந்தனர்.1026 அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 4, 30, 710 பேரும், மாணவர்களில் 4, 04,904 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

மாணவிகள் 94.66% பேரும் மாணவர்கள் 88.16% பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் 6.50 % அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.  www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!