Skip to content

தஞ்சை வருகிறார் முதல்வர் ஸ்டாலின்…. 2 நாள் நிகழ்ச்சி விவரம்

தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின் வருகிறார். 15ம் தேதி தஞ்சை வரும் முதல்வர்  பழைய  பஸ் நிலையம் அருகே  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.

அப்போது அவர்  பொதுமக்களளையும் சந்திக்கிறார். அன்று இரவு   தஞ்சையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து  உரையாடுகிறார்.

மறுநாள்(16ம்தேதி) காலை  தஞ்சை மகாராஜா மகாலில்,  துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. அண்ணன் மகன் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அதைத்தொடர்ந்து சரபோஜி கல்லூரி வளாகத்தில் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இதற்கிடையே  16ம் தேதி அல்லது  15ம் தேதி பிற்பகல் கல்லணையில் இருந்து முதல்வர் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  முதலமைச்சரை வரவேற்கும் வகையில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் முதல்மைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உருவம் பொறித்த ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.பலூனை உயர் கல்வி துறை அமைச்சர் கோ.வி.செழியன் பறக்க விட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செழியன் கூறியதாவது:

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 5 பேர் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர்கல்வியில் இடை நிறுத்தம் இல்லாமல் கல்வி தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது

மேட்டூர் அணையில் இன்று திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை எளிதாக செல்ல A மற்றும் B வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளன.

விதை நெல் தட்டுப்பாடு இல்லாமல் கையிUப்பு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கோ.வி.செழியன் கூறினார்.

error: Content is protected !!