Skip to content
Home » மக்களுடன் முதல்வர் பயனாளிகளுக்கு….. முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்

மக்களுடன் முதல்வர் பயனாளிகளுக்கு….. முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்

மக்களுடன் முதல்வர் திட்ட  முகாம் தமிழ்நாடு முழுவதும் கடந்த  டிசமபர், ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்டது.  இந்த திட்டத்தில்   பல லட்சம் மக்கள் மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி 30 நாட்களுக்குள்  மக்களின் கோரிக்கைகளுக்கு  பதில் அளிக்கும் வகையில்  அவர்களது  விண்ணப்பங்கள்பரிசீலிக்கப்பட்டு இன்’று தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள்   வழங்கப்பட்டன.

சென்னையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  கலைவானர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு  நலத்திட்டங்கள்  வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பொதுப்பணித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, நீர்வளத்துறை, வேளாண்மைத் துறை போன்ற பல்வேறு துறைகளுக்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 1,598 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர்   கலந்து கொண்டனர்.

இதுபோல திருச்சியில்  கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில்  அமைச்சர்கள்  கே.என். நேரு,  மகேஸ் ஆகியோர் கலந்து கொண்டு  ஆயிரகணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.  மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்,  பேட்டரி வீல் சேர்,  3 சக்கார  சைக்கிள்,  காது கேட்கும் கருவி என பல்வேறு உதவிகளையும் அமைச்சர்கள் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!