Skip to content
Home » பெங்களூருவில், முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

பெங்களூருவில், முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

  • by Senthil

பெங்களூருவில் இன்று மாலை காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி 2024 மக்களவை தேர்தலுக்கான வியூகம் வகுக்கிறார்கள். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன், ஈஸ்வரன்  உள்ளிட்ட  24 கட்சித்தலைவர்கள் கலந்து

கொள்கிறார்கள். இன்று காலை முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் பெங்களூரு சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே. சிவக்குமார்  பொன்னாடை, மாலை அணிவித்து வரவேற்றார். பின்னர் விமான நிலையத்தில் அவர்கள்  ஆலோசனை நடத்தினர். இதில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா, டி.ஆர். பாலு எம்.பி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!