திமுகவில் கடந்த சில நாட்களாக உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அதிருப்திகள் நிலவி வரும் சூழலில், திருப்பூர் மாசெ செல்வராஜின் இந்த விலகல் அறிவிப்பு அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சியுடன் பயணித்த ஒரு மூத்த நிர்வாகி, அதுவும் மாவட்டச் செயலாளர் (மா.செ ) அந்தஸ்தில் உள்ள ஒருவர் திடீரென விலகியிருப்பது திருப்பூர் மாவட்ட திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்களைப் புறக்கணித்துவிட்டு, அண்மைக் காலங்களில் மாற்றுக்கட்சிகளில் இருந்து திமுகவிற்கு வந்தவர்களுக்கே கட்சியில் அதிக முக்கியத்துவமும், பதவிகளும் வழங்கப்படுவதாக செல்வராஜ் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்த மூத்த நிர்வாகியின் விலகல் கடிதம் மற்றும் குற்றச்சாட்டு தர்மசங்கடத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைக்கு வேறு எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் தனக்கு இல்லை என்று செல்வராஜ் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், திருப்பூரில் வலுவான செல்வாக்கு கொண்ட இவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை அரசியல் விமர்சகர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.
📌 பின்னணி: கே.செல்வராஜ் அவர்கள் திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் முன்னாள் மேயராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
