Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த மாதம் நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மதியம் நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த வெற்றியானந்தம் என்ற மாணவர் தேர்வு அச்சம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஏற்கெனவே மூன்று முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த அவர், இன்று 4-வது முறையாக மறுதேர்வு எழுதவிருந்தார். மதியம் தேர்வு தொடங்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு, நீட் தேர்வு குறித்த பயத்தால் மாணவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!