ஈரோடு: பவானி அருகே குப்பிச்சிபாளைய அரசு உயர் நிலைப்பள்ளியில் மின்சாரம் தாக்கி 6ம் வகுப்பு படிக்கும் யோகேஷ் (11) என்ற மாணவன் உயிரிழந்தார். உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்ததில் யோகேஷ் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
