Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி… கரூரில் மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி-கரூரில் மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகை இட முயன்ற பொழுது காவல்துறையினர் மாணவர்களை தாக்கி கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூரில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு; இந்திய மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி கைது செய்த சம்பவத்தை கண்டித்து, கரூரில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்புப் புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் தான்தோன்றிமலை பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்தும், மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

error: Content is protected !!