Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் அஜீத் தந்தை மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நடிகர் அஜீத்குமாரின் தந்தை  சுப்பிரமணியம்(86) பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார்.  இது தொடர்பாக நடிகர் அஜீத் விடுத்துள்ள வேண்டுகோளில், எனது தந்தை மறைவு இறுதி சடங்குகள் குடும்ப நிகழ்வாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.   இறப்பு தகவல் அறிந்த ரசிகர்கள்  போனில் தொடர்பு கொள்ள வேண்டாம். இப்போது யாரிடமும் பேச முடியாத நிலையில் இருக்கிறோம்.  எங்கள் இழப்பை புரிந்து கொண்டு தனிப்பட்ட முறையில் இறுதிச்சடங்கு செய்ய ஒத்துழையுங்கள் ரசிகர்கள் யாரும் வரவேண்டாம். ரசிர்கள் போன்கள் மூலமும் தொடர்பு கொள்ள வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் அஜீத் தந்தை மறைவுக்கு தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!