Skip to content
Home » சூரியனின் வடதுருவத்தில் திடீரென உடைப்பு…பூமிக்கு ஆபத்தா?…

சூரியனின் வடதுருவத்தில் திடீரென உடைப்பு…பூமிக்கு ஆபத்தா?…

  • by Senthil

சூரியன் எப்போதுமே தன்னகத்தே பல்வேறு சுவாரஸ்யங்கள், புதிர்களை உள்ளடக்கிய கிரகமாகவே இதுவரை இருக்கிறது. அவ்வப்போது சூரியனைப் பற்றி சில விந்தையான விஷயங்களை அறிவியல் அறிஞர்கள் நமக்குப் பகிர்வது உண்டு. சூரியனைப் பற்றி தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய துண்டு உடைந்துவிட்டதாகவும், அது அதனுடைய வட துருவப் பகுதியில் ஒரு பெரும்புயலைப் போல் சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் வட துருவத்தின் ஒரு பகுதி உடைந்து விழும் தருணத்தை இதுவரை கண்டிராத வகையில் நாசா படம்பிடித்துள்ளது. இது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்னொரு புறம் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வாயிலாக பதிவு செய்யப்பட்ட அந்தக் காட்சியை விண்வெளி ஆராய்ச்சியாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் அவர், போலார் வோர்டக்ஸ் பற்றிதான் எல்லாப் பேச்சும் நடைபெறுகிறது. சூரியனின் வடக்குப் பக்கத்தின் மேற்பரப்பில் ஒரு பெரிய துண்டு உடைந்துவிட்டது. அது இப்போது போலார் வார்டக்ஸாக சூரியனின் வட துருவத்தில் சுற்றி வருகிறது. இதன் தாக்கத்தை பற்றிதான் ஆராய்ந்து வருகிறோம் என்று எழுதியுள்ளார். இதனால் பூமிக்கு பாதிப்பு உண்டா என்று எந்த விஞ்ஞானிகளும் விளக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!