Skip to content
Home » ஐபிஎல்…..சன் ரைசர்ஸ்….. சாதனை வெற்றி

ஐபிஎல்…..சன் ரைசர்ஸ்….. சாதனை வெற்றி

17-வது ஐ.பி.எல். தொடர் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது லீக் ஆட்டத்தில் நேற்று முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்களில் 277/3 ரன்கள் குவித்து ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த அணியாக சாதனை படைத்தது. டிராவிஸ் ஹெட் 62, அபிஷேக் சர்மா 63, ஐடன் மார்க்ரம் 42, ஹென்றிச் கிளாசென் 80 ரன்கள் குவித்தனர்.

இதனையடுத்து 278 ரன்களை துரத்திய மும்பைக்கு ரோகித் சர்மா 26, இசான் கிசான் 34, நமன் திர் 30, திலக் வர்மா 64 ரன்கள் அடித்து அதிரடியாக விளையாடும் முயற்சியில் அவுட்டானார்கள். அதனால் கடைசியில் டிம் டேவிட் அதிரடியாக 42 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 246/5 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை போராடி தோல்வியை சந்தித்தது.  எதிர்தரப்பில் ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகமான 277 ரன்கள் குவித்த நி்லையில்,  அதை சேசிங் செய்த மும்பை வீரர்கள்  மன தைரியத்துடன் எதிர்கொண்ட விதம் பாராட்டும்படியாக இருந்தது.  மொத்தத்தில் நேற்றை ஆட்டம்  ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது.

இந்த வெற்றிக்கு அதிவேகமாக அரை சதம் அடித்த ஐதராபாத் வீரர் என்ற சாதனை படைத்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியதால் கிடைத்த தன்னம்பிக்கைதான் தம்முடைய அதிரடியான ஆட்டத்திற்கு காரணம் என்று அபிஷேக் சர்மா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு: “உள்ளூர் போட்டிகள்தான் எங்களுக்கு அதிகமான தன்னம்பிக்கையை கொடுக்கிறது. அதை வைத்து களத்திற்கு சென்று வெளிப்படுத்துங்கள் என்பதே பேட்ஸ்மேன்களுக்கு என்னுடைய மெசேஜாகும். என்னுடைய திட்டம் அட்டாக் செய்வதாக இருந்தது. டிராவிஸ் ஹெட் போன்ற எனக்கு மிகவும் பிடித்த ஒருவருடன் சேர்ந்து பேட்டிங் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரை நான் ரசிக்கிறேன். உன்னுடைய இடத்தில் பந்து வந்தால் அடி என்று அவர் என்னிடம் சொன்னார். எந்த இடமாக இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்பால் நான் மகிழ்கிறேன். நேற்று இரவு பிரையன் லாராவிடம் பேசியது எனக்கு அதிகமாக உதவியது. வலைப்பயிற்சியில் நான் பேட்டிங்கை விட பவுலிங்கில் அதிகமாக கவனம் செலுத்துகிறேன். எனவே பந்து வீச்சிலும் என்னுடைய சிறந்தவற்றை கொடுக்க முயற்சிக்கிறேன்” என்று கூறினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!