Skip to content
Home » சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்…

சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்…

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா தலமான  அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி  கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இக்கோவில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடப் பெற்ற கோவிலாகும். பொன்னார் மேனியனே என்ற பாடல் இக்கோயிலுக்காக பாடப்பட்ட மிகவும் பிரபலமான பாடலாகும். மேலும் இக்கோவிலின்  மேற்கிலிருந்து கிழக்காக வந்து கொண்டிருக்கும் கொள்ளிடம் ஆறு கோவிலின் முன்னே வந்தவுடன் தெற்கிலிருந்து வடக்காக ஓடுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. மற்றும் இக்கோவிலின் விருச்சகம் பனை மரம் ஆகும்.

சுமார் 1500 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக ஒரு பனைமரம் இன்னும் இருந்து வருவது இக்கோவிலின் மிகச் சிறப்பாக கருதப்படுகிறது. இத்தகய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நேற்று மாசிமக

பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக ஆதிசேஷ வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம்,குதிரை வாகனம், யானை வாகனம், காமதேனு வாகனம் ஆகியவற்றில் சாமிகள் ஊர்வலமாக வந்தன. இதனைத்தொடர்ந்து நேற்று சுந்தராம்பிகை உடனே பாலாம்பிகை சாமிகளுடன் நேற்று திருத்தேரில் வலம் வந்தது. பொதுமக்கள் உற்சாகமாக தேரை இழுத்துச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் இப்பகுதியைச் சுற்றியுள்ள கண்டிராதித்தம், இலந்தைகூடம், செம்பியக்குடி,
குலமாணிக்கம், பாளயபாடி, அரண்மனைகுறிச்சி, திருமானூர், கீழகவட்டாங்குறிச்சி, சேனாபதி முடிகொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்தனர். கோவிலின் முன்பிருந்து தொடங்கப்பட்ட இத்தேரோட்டம் ஊரின் முக்கிய  தெருக்கள் வழியாக  சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சிக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!