திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த நாக ரத்தினம் என்பவரின் மகள் அபிராமி(17). இவர் தில்லைநகரில் உள்ள ஆவர்தீஸ் என்ற கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்படுவதால் கடும் அவதிக்கு உள்ளாகி வந்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த அவர் எலி விஷத்தை தின்று சத்திரம் பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்துள்ளார். இதன் காரணமாக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.