கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஆவினசேரி பகுதியை சேர்ந்தவர் உன்னி மாயா (30). இவர் அனக்கல் பகுதியை சேர்ந்த சிவபிரசாத்தை (35) காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
சிவபிரசாத் அப்பகுதியில் உள்ள சந்தையில் வேலை செய்து வந்தார். அதேவேளை, உன்னி மாயா திருச்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இதனிடையே, உன்னி மாயாவின் நடத்தையில் சிவபிரசாத் சந்தேகப்பட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம், சண்டை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், உன்னி மாயா நேற்று காலை வேலைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது, உன்னி மாயாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு சிவபிரசாத் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சிவபிரசாத் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், மனைவியை கொலை செய்தது குறித்து சிவபிரசாத் தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த உன்னி மாயாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்திதனர். அங்கு உன்னி மாயாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கன்வே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த சிவபிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
