மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சித் தூணில் 24 மணி நேரமும் தீபம் ஏற்றுவது கோயிலின் வழக்கமில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோயில் மற்றும் மலைப்பகுதியைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தொடர்ந்து தீபம் எரியவிட வேண்டும் எனத் தொடரப்பட்ட பொதுநல வழக்கிற்குப் பதிலளிக்கும் வகையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பழமையான நடைமுறைகளைத் தாண்டி புதிய மாற்றங்களைச் செய்ய இயலாது என்பதை அறநிலையத்துறை உறுதி செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில்
