டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலை, தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் இன்று சந்தித்து பேசுகின்றனர். மேகதாது அணை விவகாரம், காவிரியில் நீர் திறப்பு உள்ளிட்ட தமிழக பிரச்னைகள் குறித்து அமைச்சர்கள் எடுத்துரைக்க உள்ளனர். கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்தவும், ஒதுக்கீடு செய்யப்படும் நீரை உரிய காலத்தில் திறக்க வலியுறுத்தியும் மனு அளிக்கின்றனர்.
மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டிலை சந்தித்த தமிழக அமைச்சர்கள்
