Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக 17-வது சட்டசபை தொடக்கம்: முதல் நபராக முதலமைச்சர் விஜய் எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்பு

தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும், திருச்சி கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ளார். அதற்காக அவர் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதால், 234 தொகுதிகளில் ஒரு தொகுதி காலியாகிவிட்டது.
இந்த நிலையில், தமிழகத்தின் 17-வது சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். முதல் நபராக முதல்-அமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து மற்ற எம்.எல்.ஏ.க்கள் பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர்.
13-ந் தேதிக்குள், அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி பெரும்பான்மையை நிரூ பிப்பதற்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சட்டசபை எப்போது கூடும் என்பது இன்று தெரியவரும்.

error: Content is protected !!