Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை…மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர்கள் கூட்டம்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சை மாவட்டக்குழு அலுவலகத்தில், தஞ்சை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர்கள் கூட்டம், ஒன்றியக் குழு உறுப்பினர் கே.சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.அபிமன்னன், பி.எம்.இளங்கோவன், தஞ்சாவூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சண்முகவேலு, வனரோஜா மற்றும் 20 கிளைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், “ஒன்றிய பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியைக் கண்டித்து தஞ்சை ஒன்றியம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் வீடு, வீடாக துண்டுப் பிரசுரங்கள் கொடுப்பது, என்றும், எதிர் வரும் டிச.2 ஆம் தேதியன்று தஞ்சை தாலுகா அலுவலகத்தில் குடிமனைப் பட்டா கேட்டு மனு கொடுப்பது, டிசம்பர் மாதம் நடைபெறக்கூடிய கட்சியினுடைய மாவட்ட மாநாட்டு பேரணியில் ஒன்றியத்தின் சார்பாக சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!