டாடா சன்ஸ் (Tata Sons) தலைவர் என். சந்திரசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆகஸ்ட் 18ம் தேதி அன்று நடைபெற உள்ள நிறுவனத்தின் பொதுக் குழு கூட்டத்திற்கு (AGM) முன்பாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. அவர் தனது தற்போதைய பதவிக்காலம் முடியும் வரை தொடர்ந்து செயலாற்றுவார் என்றாலும், மீண்டும் பதவியில் தொடர விரும்பவில்லை எனத் தெரிகிறது.
