திருப்பூர்: பல்லடம் அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உடற்கல்வி ஆசிரியர் சரவணன் மீது வீரபாண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஆசிரியர் சரவணனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
