Skip to content
Home » முதல் டெஸ்ட்……இந்திய பந்து வீச்சில்…. இங்கிலாந்து திணறல்

முதல் டெஸ்ட்……இந்திய பந்து வீச்சில்…. இங்கிலாந்து திணறல்

  • by Senthil

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5  டெஸ்ட்  போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில்  இன்று தொடங்கியது.   டாஸ் வென்ற இங்கிலாந்து  கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலியும், பென் டக்கெட்டும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருவரும் அதிரடியில் இறங்கி பவுண்டரிகளை விரட்டினர். வேகப்பந்துவீச்சு எடுபடாததால், இந்திய கேப்டன் ரோகித் சர்மா சுழல் பந்துவீச்சை அறிமுகப்படுத்தினார்.  இதையடுத்து அஸ்வின், ஜடேஜா இருவரும் சிறப்பாக பந்துவீசி எதிரணியை மிரட்டினர்.

இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி  திணறியது. ஜாக் கிராலி(20), பென் டக்கெட்(35), ஜோ ரூட்(29), பேர்ஸ்டோவ்(39), ஆகியோர் சிறந்த தொடக்கம் கிடைத்தும் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் ஆட்டமிழந்தனர். ஒல்லி போப்(1), பென் பேக்ஸ்(4) இருவரும் வந்த வேகத்தில் வெளியேறினர். அடுத்ததாக  ரெகான் அகமது 13 ரன்னிலும்,  டாம் ஹார்ட்லி 23 ரன்னிலும் வெளியேறினர்.

இங்கிலாந்து அணி 52  ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து164 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. இந்திய அணி தரப்பில் அஸ்வின், , அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.    ஜடேஜா3, பும்ரா 1 விக்கெட் எடுத்தனர்.

அஸ்வின்  இன்று 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இன்னும் 8 விக்கெட்டுகள் எடுத்தால் அவர் டெஸ்டில் 500 விக்கெட் எடுத்து சாதனை நிகழ்த்துவார்.   இந்திய வீரர்களில்  அனில் கும்ளே தான் டெஸ்டில் அதிக விக்கெட்டுகள்(619) வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இந்திய அளவில்  அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார். உலக அளவில்  டெஸ்ட்களில் அதிக விக்கெட் வீழ்த்திய  வீரர்கள் விவரம்:

முத்தையா முரளிதரன் – 800 விக்கெட்டுகள்.  சேன் வார்னே – 708 . ஜேம்ஸ் ஆண்டர்சன் – 690 . அனில் கும்ப்ளே – 619 விக்கெட்டுகள்‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!