Skip to content
Home » தஞ்சையில் 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா….கோலாகலம்…

தஞ்சையில் 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா….கோலாகலம்…

  • by Senthil

தஞ்சாவூரில் கருட சேவை விழாவைத் தொடர்ந்து 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை ஆகியவை சார்பில் 89 ஆம் ஆண்டு கருட சேவைப் பெருவிழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் 8ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, 24 கருட சேவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, 15 பெருமாள் கோயில்களில் வெண்ணெய்த்தாழி பெருவிழா என்கிற நவநீத சேவை விழா இன்று நடைபெற்றது. இதில், வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிகுன்றப் பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், மேல வீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் கோயில் தெரு ஜனார்த்தனப் பெருமாள், கரந்தை யாதவக் கண்ணன், கீழ வீதி வரதராஜப் பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமிப் பெருமாள், மகர்நோம்புசாவடி நவநீத

கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாதப் பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், நாலுகால் மண்டபம் கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகிய கோயில்களிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பாடு நடைபெறவுள்ளது.  இதையடுத்து, அந்தந்த கோயில்களிலிருந்து கொடிமரத்து மூலைக்குச் சென்றடைந்து, பின்னர், கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகியவற்றில் வலம் செல்லும் வைபவம் நடைபெற்றது. ஒரே இடத்தில் 15 நவநீத சேவை என்பதால், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இந்த விழா நாளை ஞாயிற்றுக்கிழமை விடையாற்றியுடன் முடிவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!