Skip to content
Home » துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்..

துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சங்கத் தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். நகர தூய்மை பணியாளர் சங்க துணைத் தலைவர் ஆனந்த்ராஜ் .மாநகர தூய்மை பணியாளர் சங்க நகரச் செயலாளர் உஷா, துணைச் செயலாளர் லட்சுமி. பொருளாளர் பாபு, துணை பொருளாளர் முனியம்மாள் ஆகியோர் முன்னிலை வைத்தனர் . விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய மாநில துணைச் செயலாளர் ஜெய்சங்கர். நில உரிமை மீட்பு இயக்க மாநில துணைச் செயலாளர் வீரன் வெற்றிவேந்தன். தஞ்சை மாநகர செயலாளர் தமிழ் முதல்வன் ஆகியோர் பேசினர்.

தூய்மை பணியாளருக்கு வழங்கக்கூடிய சம்பளத்தை கான்ட்ராக்ட் முறையில் வழங்குவதை உடன் ரத்து செய்ய வேண்டும். குழு மூலம் சம்பளம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது. அனைத்து தற்காலிக தூய்மை பணியாளர்களையும் அரசு

பணியாளர்களாக உடன் அங்கீகரித்து பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

பின்னர் ரயிலடியிலிருந்து பேரணியாக சென்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் வல்லம் சங்கர், குருங்குளம் முருகானந்தம், தஞ்சை ரமேஷ், பரத், பாஸ்கர், நகர முன்னாள் செயலாளர் அருணாச்சலம், ஒன்றிய முன்னாள் செயலாளர் சாமி மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!