Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை…

தஞ்சை அருகே உள்ள நடுவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (45) விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தததாக கூறப்படுகிறது.. இதனால் மனமுடைந்த ரவி கடந்த 8ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சிகொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!