Skip to content
Home » விவசாயிகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் நுட்பத்தை கையாள வேண்டும்…

விவசாயிகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் நுட்பத்தை கையாள வேண்டும்…

  • by Senthil

தஞ்சாவூர் அருகே விளாரில் நேற்று தஞ்சாவூர் தென்னை உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில், வெல்லம் தயாரிக்கும் தொழிற்கூடம், தேங்காயிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் ஆகிய துவக்க விழா நடந்தது.  குழுவின் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். தஞ்சாவூர் மாவட்ட வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் ஜி.வித்யா, மாவட்டதொழில் மைய பொது மேலாளர் வி.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தேங்காயிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்களையும், தேங்காயிலிருந்து வெல்லம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் பார்வையிட்ட நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் ஆர்.சங்கர் நாராயணன் பேசியதாவது:

மத்திய அரசு சார்பில் 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பை உருவாக்க அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் மட்டுமே 250 அமைப்புகள் உள்ளது. தஞ்சாவூர் பகுதிகளில் நெல் மற்றும் தென்னை, கரும்பு அதிக அளவில் உற்பத்தி ஆகுவதால், உழவர் உற்பத்தி குழுவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களின் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும். நல்ல வலுவான உற்பத்தியாளர் கூட்டமைப்பை உருவாக்கும் வகையில் நபார்டு மூலம் பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் வருங்காலத்தில் விவசாய புரட்சிகளை ஏற்படுத்தி விவசாய பொருட்களுக்கு நல்ல விலைகள் கிடைக்க உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நல்ல முறையாக அமையும். இந்த ஆண்டு ரூ.130 கோடி அளவுக்கு நீர் நிலைகள், அணைகள் போன்ற கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் விவசாய புரட்சியை உருவாக்க போவது உற்பத்தியாளர்

கூட்டமைப்புகள் தான். விவசாயிகள் உற்பத்தி பொருட்களை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்வதை காட்டிலும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக கொண்டு செல்லும் போது அதிக லாபத்தை பெற முடியும்.

விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் நல்ல தரமான பொருட்களை கொண்டு செல்வதற்காக தான் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் ஒவ்வொரும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற தொழில்நுட்பத்தை கையாள வேண்டும். நுகர்வோர் எந்த மாதிரியான பொருட்களை விரும்புகிறார்கள் என்பதற்கு ஏற்ப உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும். குறைந்தது 40 சதவீதம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்யதால் கடை வாடகை, தேவையற்ற செலவு குறையும். இதனால் விவாயிகளுக்கு லாபமும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!