Skip to content
Home » தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா..பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரதம் ஆடி அசத்தல்…

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா..பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரதம் ஆடி அசத்தல்…

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் தமிழர்களை மட்டுமின்றி வெளிநாட்டினரையும் தன்வசம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. சிற்பக்கலை, கட்டிக்கலைக்கும் சான்றாக இருக்கும் இந்த கோவிலை பார்த்து வியக்காதவர்கள் இருக்கவே முடியாது.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இக்கோவிலில் நடக்கும் சதய விழாவும், சங்கீத நாட்டிய நிகழ்ச்சியும் மிகவும் பிரபலம். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சதய விழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற விழாக்கள் நடக்கும்.

இந்த விழாக்களில் ஒன்று சித்திரை பெருவிழா. சித்திரை தேரோட்ட விழாவிற்குக் கடந்த 17-தேதி பந்தக்கால் நடும் விழா நடைபெற்ற நிலையில் மே-1-ல் பெருந்திருவிழா எனப்படும் தேரோட்டம் தஞ்சை வீதிகளில் உலா வரவுள்ளது.

இறுதி நாளான மே-5-ல் தீர்த்தவாரி விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்று வரை தினமும் இரவில் சாமி ஊர்வலமும், திருமுறை பண்ணிசை நிகழ்ச்சியும், பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதன் படி சந்திரசேகர விழாவில்

பழமுதிர் சோலை இசைக் கலைமணி மகேஷ் ஓதுவாரின் பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆடிய பரதம் பலரையும் ஈர்த்தது. பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மெய்மறந்து மாணவர்கள் ஆடிய பரதத்தை கண்டு ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!