தஞ்சையில் விதிகளை மீறி மாடுகளின் கழிவுகளை குழாய் மூலம் கொண்டு சென்று மழை நீர் வடிகால் சாக்கடையில் விட்ட மாடுகள் உரிமையாளர்களுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தார் மாநகராட்சி ஆணையர்
தஞ்சை மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார்
கீழ ராஜவீதி பகுதிகளில் விதிகளை மீறி மாடுகளின் சாணம் மற்றும் கழிவுகளை குழாய் மூலம் கொண்டு சென்று மழைநீர் வடிகால் சாக்கடையில் இணைத்து இருப்பதை ஆணையர் கண்டறிந்தார்
மேலும் அப்பகுதியில் உள்ள உணவகங்கள் குழாய் மூலம் மழைநீர் வடிகால் சாக்கடையில் இணைத்து இருப்பதையும் கண்டறிந்த ஆணையர் உணவகங்கள் உரிமையாளர்கள் மாடுகளின் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரித்தார்
அதே நேரத்தில் இதனை கண்டு கொள்ளாமல் இருந்த மாநகராட்சி அலுவலர்களை கடிந்து கொண்ட ஆணையர் உணவகங்கள் உரிமையாளர்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா இரண்டு ஆயிரம் ரூபாய் விதித்து மீண்டும் இது போன்ற தவறுகள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
